;
Athirady Tamil News

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு – விசாரணையை ஆரம்பித்துள்ள வல்வெட்டித்துறை பொலிஸார்

0
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினமான எதிர்வரும் 25ம் திகதி அவர்களின் சிலை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சதீஸ் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  தங்கதுரை , குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் , ஜூலை 25மற்றும் 28ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளால் மோசமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.