;
Athirady Tamil News

இந்திய நாடாளுமன்றத்தின் முன் பரபரப்பை கிளப்பிய இளைஞர்கள் ; கரப்பான் பூச்சி கட்சி தலைவர் கைது

0

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அபிஜித் தீப்கேவை இன்று டெல்லி பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றம் நோக்கி நடப்போம் என்ற பேரணியின் போது, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டம்
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டனர்.

போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தடுத்தனர்.

இந்த சம்பவத்தால் மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜீவ் சௌக், ஜன்பத் உள்ளிட்ட ஐந்து மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பொலிசார் அமைத்திருந்த பல அடுக்கு இரும்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் முன்னேறியதால், அங்கு நிலைமை மோசமடைந்தது.

மேலும் கூட்டத்தைக் கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடியையும் நடத்தினர்.

இந்த தடியடியின் போது, உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் இருந்த தங்களது கட்சித் தலைவர் அபிஜித் தீப்கேவை பொலிசார் கைது செய்துள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.