;
Athirady Tamil News

கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு; டிரம்ப் அறிவிப்பு

0

டொரண்டோ

கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்து உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் வெளியிட்ட செய்தியில், கனடா நாட்டு பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று அறிவித்து உள்ளார். அமெரிக்காவின் ஆட்டோக்கள், ஆல்கஹால் மற்றும் பால் பொருட்களுக்கு எதிராக முறையற்ற வகையில் கனடா நடந்து கொண்டது என டிரம்ப் குற்றச்சாட்டாக கூறினார்.

50 சதவீத வரி
இதற்கு பதிலாக இந்த வரி விதிகள் அமல்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார். இதன்படி, கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்துகள் ஏற்படுவதுடன், புதிய பொருளாதார குழப்ப நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

அதனுடன், டிரம்ப் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே இருந்த இணக்கம் வாய்ந்த சூழலிலும் பாதிப்பு ஏற்படுத்தும்.

எனினும் இந்த வரி விதிப்புகளானது, எரிசக்தி பொருட்கள், பொட்டாஷ், மீன் மற்றும் முக்கிய தாதுக்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இருக்காது. ஆனால், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின்போது இறக்குமதி வரியில் இருந்து பாதுகாக்கப்பட்ட பொருட்களுக்கு இந்த 50 சதவீத வரி விதிப்பு இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.