;
Athirady Tamil News

செம்மணிக்கு வருகைதரவுள்ள ஐரோப்பிய பிரதிநிதிகள் – போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு

0
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை  போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அழைப்பு விடுத்துள்ளனர்.
அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

போர் நிறைவுற்று பல வருடங்களாகியும் நீதி தரப்படாதிருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கும், தற்போது 454 மனித எலும்புக்கூடுகள் அகலப்பட்டுள்ள செம்மணி மனிதப்புதைகுழி விடயத்திற்கும் உடனடியாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்.

தமிழ் இன அழிப்பின் சான்றாதாரமாக இருக்கின்ற இவ்விடயங்களை மூடிமறைத்து நீர்த்துப்போகச்செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன.

நீதி கோரி தொடர்ச்சியாகப் போராடிவரும் ஏமாற்றும் அரசின் கபட நாடகங்களுக்கு சர்வதேச சமூகம் ஏமார்ந்து போகக்கூட்டது.

அந்த வகையில் நாளையதினம் புதன்கிழமை காலை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம்.

காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகும் இப்போரட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசரார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவசர அழைப்பு விடுக்கின்றோம் -எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.