;
Athirady Tamil News

இந்தோனேசியா: படகில் தீப்பற்றி எரிந்து விபத்து – 5 பேர் பலி

0

ஜகார்தா,

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. ஆயிரக்கணக்கான தீவுகளை கொண்ட இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் சுரபயா நகரில் இருந்து தெற்கு சுலவசி மாகாணம் மகசர் நகருக்கு இன்று படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 271 பயணிகள் பயணித்தனர்.

5 பேர் பலி
வடகிழக்கு ஜாவாவின் மடூரா தீவு அருகே சென்றபோது படகில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பலரும் கடலில் குதித்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படகில் சிக்கியவர்கள், கடலில் குதித்தவர்கள் என மொத்தம் 225 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். இதையடுத்து, கடலில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், படகில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.