;
Athirady Tamil News

எல் நினோ வானிலை சீற்றம் தீவிரம் – 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

0

எல் நினோ வானிலையின் தாக்கத்தால், இலங்கையில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள 49,344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 161,451 மக்கள் காலநிலை மாற்றத்தினால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

36 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நீர் விநியோகம்
இன்று காலை(12.09.2026) வெளியான பேரிடர் மேலாண்மை மையம் தரவு அறிக்கையின்படி, இலங்கை முழுவதும் உள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டங்கள் தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, தற்போது அந்த 36 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 மக்களுக்குக் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்டப்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.