;
Athirady Tamil News

பாலஸ்தீனத்தை அழிக்கும் நோக்கில் இஸ்ரேல்: மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு!

0

பாலஸ்தீன மேற்கு கரையை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலின் நடவடிக்கைகள், பாலஸ்தீன மக்களை தனிமைப்படுத்தி ஒழிப்பதற்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதி என இஸ்ரேலை மையமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் அமைப்பான பிஸெலெம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் (மேற்கு கரை மற்றும் காஸா) நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து, அவற்றை ஆவணப்படுத்தி வெளிக்கொண்டுவருவதே பிஸெலெம் மனித உரிமைகள் அமைப்பின் முக்கியப் பணி.

ஒழிக்கும் திட்டம் என்ற பெயரில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வன்முறை, இனச் சுத்திகரிப்பு, மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகள், பொருளாதாரத் தடை, சமூக மற்றும் அரசியல் அழிப்பு என இஸ்ரேல் தீட்டியுள்ள 5 திட்டங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்று குற்றம் சாட்டியுள்ளது.

”பாலஸ்தீனர்கள் ஒரு மக்கள் கூட்டமாக இங்கு தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையான நிலைமைகளை இஸ்ரேலின் இந்தத் திட்டங்கள் சிதைக்கின்றன. இதை குடியேற்ற காலனித்துவத் திட்டம் என்று அழைப்பது, இந்த நிலத்துடனான யூதர்களின் தொடர்பை மறுப்பதற்காகச் சொல்லப்படவில்லை. இஸ்ரேலின் அரசியல் திட்டங்களை விவரிக்கவே அவ்வாறு சொல்லப்படுகிறது” என்று பிஸெலெம் மனித உரிமைகள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் யூலி நோவாக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதுபற்றி இஸ்ரேலிய அதிகாரிகள் தரப்பில் எந்தக் கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.