வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப் பகலில் வீடு புகுந்து திருட்டு
வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப் பகலில் வீடு புகுந்து திருட்டு
வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப் பகலில் வீடு புகுந்து பெறுமதியான நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (15.09) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் பட்டப் பகலில் புகுந்த திருடர், வீட்டுக் கதவினை சூட்சுமாக உடைத்து உள் நுழைந்து அங்கிருந்த அலுமாரிகளை உடைத்து சங்கிலி, தோடுகள் உள்ளிட்ட நகைகள் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றையும் எடுத்துச் சென்றுள்ளார்.
காலை வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்ற ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தமை தெரிய வந்தது. இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுததுள்ளதுடன், தடவியல் பொலிசாரின் உதவியையும் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
