;
Athirady Tamil News

யாழில். வணிக கட்டடத்தை அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சிபுரிந்த டக்ளஸ் ?

0
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவை அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதனத்தை அடாத்தாக ஆட்சி புரிந்துள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற இடைக்காலக் கட்டளையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் தமக்குச் சொந்தமாக உள்ள ஆதனத்தை டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களுக்கு மேலாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவதாக இருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த ஆதனத்தை மீள ஒப்படைக்குமாறு பல சந்தர்பங்களில் கோரிக்கை விடுத்ததாகவும், 2015ஆம் ஆண்டு ஆதனத்தை மீள ஒப்படைப்பதாக டக்ளஸ் தேவானந்தா எழுத்துமூலம் உறுதியளித்த போதிலும், இதுவரை அதை ஒப்படைக்கவில்லை என்றும் வழக்காளிகள் குறிப்பிட்டிருந்தனர். 
 
இந்த வழக்கில் வழக்காளிகள் சார்பில் மனு மற்றும் பல ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், எதிராளியான டக்ளஸ் தரப்பிலும் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில்  விசாரணைக்காக எடுக்கப்பட்ட போதே, எதிராளியான டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்த காலங்களில் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி குறித்த ஆதனத்தில் அடாத்தாக ஆட்சிபுரிந்துள்ளார் என சுட்டிக்காட்டிய மன்று, வழக்காளிகள் கோரியதற்கு அமைய குறித்த ஆதனத்தில் மாற்றங்களைச் செய்வதற்கும், ஆதனத்தை உரிமை மாற்றம் செய்வதற்கும், எதிராளியான டக்ளஸால் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தடை விதித்து இடைக்காலக்; கட்டளையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.