யாழ்ப்பாணத்தில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி சேவையில் ஈடுபட்ட பேருந்தினை வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் பிடித்து கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுவித்துள்ளனர்.
வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் இன்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது , உரிய அனுமதிகள் இன்றி பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகஸ்தர்களுக்கான சேவையில் ஈடுபட்ட பேருந்தினை பிடித்துள்ளனர்
விசாரணையின் போது குறித்த சேவையில் ஈடுபடும் பேருந்து பழுதடைந்தமையினால் , மாற்று பேருந்தாக இந்த பேருந்து சேவையில் ஈடுபட்டதாக அதன் சாரதி தெரிவித்துள்ளார்
அதனை அடுத்து சாரதியை கடுமையாக எச்சரித்த பின்னர் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் பேருந்தினை விடுவித்தனர்.