;
Athirady Tamil News

அக்குறணை விபத்து ; சாரதி கைது

0

கண்டி–மாத்தளை பிரதான வீதியின் அக்குறணை, குருகோட சந்திக்கு அருகில் இன்று (19) காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டிகள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சுமார் எட்டு வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.

உயிரிழந்த நால்வரில் ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும் அடங்குவதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்த எட்டுப் பேரும் அக்குறணை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து பொலிஸாரும் அவசரகால மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய சீமெந்து லொறியின் சாரதியை அலவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.