;
Athirady Tamil News

அரசாங்கம் பதவி விலக ஒரு வாரம் அவகாசம் !!

0

தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இல்லாவிட்டால் அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உட்பட 120 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.