அலரிமாளிகைக்கு முன்பாக தொடரும் போராட்டம்!!

அலரிமாளிகைக்கு முன்பாக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு (25) அலரிமாளிகைக்கு முன்பாகவும் அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் கோரிக்கை விடுத்த போதும் அது நிராகரிக்கப்பட்டது.