;
Athirady Tamil News

கோலார் தங்கவயல் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் வாபஸ்!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் அனந்தராஜ் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வில்லை. அவர் சுயேச்சையாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.…

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த…

கர்நாடகா தேர்தல்- பிரியங்கா காந்தி நாளையும், நாளை மறுநாளும் பிரசாரம்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ்…

பறவை மோதியதால் விமானத்தில் தீ!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது. விமானம் சென்று கொண்டிருந்த போது பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியது. இதனால் விமானத்தின் என்ஜின் இருக்கும் பகுதியின்…

கர்நாடக தேர்தல்: பாஜக கோரிக்கையை ஏற்று போட்டியில் இருந்து விலகிய அதிமுக!!

கர்நாடகாவில் வருகிற 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ம் தேதி நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில்,…

கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படாது !!

பொய்யான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என்று கொழும்பு…

உள்நாட்டு போர் உச்சகட்டம்- சூடானில் குழந்தைகள் உள்பட 413 பேர் கொலை!!

ஆப்பிரிக்கா நாடான சூடானில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அங்குள்ள ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படைக்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும்…

எதிர்க்கட்சிகள் அதிரடி தீர்மானம்!!

தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எதிர்க்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற…

19 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை!!

19 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம், திங்கட்கிழமை (24) தெரிவித்துள்ளது. மழை மற்றும் மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான…

விமான நிலையத்தில் விசேட கருமபீடம்!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விசேட வசதிகளை வழங்குவதற்காக விசேட கருமபீடம் திங்கட்கிழமை (24) மாலை முதல் திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி…

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தீவிரம் – மம்தா பானர்ஜியை நாளை மறுதினம் சந்திக்கிறார்…

வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை 100 தொகுதிகளுக்குள்…

கென்யா நாட்டில் மத போதகர் பண்ணை நிலத்தில் தோண்ட, தோண்ட பிணங்கள்- 47 உடல்கள் மீட்பு!!

கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் கடற் கரையோர பகுதியான மாலிண்டி நகரை சேர்ந்தவர் பால் மெகன்சி. ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதகராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான பண்ணை அங்கு உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த பண்ணையில்…

டெல்லியில் சற்று குறைவு: கொரோனா தொற்றால் 948 பேர் பாதிப்பு- இருவர் பலி!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைநகரில் கடந்த சில நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த…

சிறுத்தையை அறைந்த ராட்சத பல்லி!!

டுவிட்டரில் தி பிகென் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில் காட்டின் பயங்கர விலங்குகளில் ஒன்றான சிறுத்தையை, சிறிய விலங்கான பல்லி அறைவது போன்ற காட்சி வைரலாகி வருகிறது. அதாவது, காட்டில் நிற்கும் ராட்சத பல்லி ஒன்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தை அதன்…

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!!

அரச பாடசாலைகளில் தரம் 02 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறித்த விண்ணப்பங்களை பதிவு தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் தரம் 06…

பெட்ரோல் பம்பில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்த பேருந்து- இருவர்…

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள பெட்ரோல் பம்பில் நேற்று பேருந்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது திடீரென பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பேருந்தில் எரிபொருள்…

மதத்தைத் துணைக்கு அழைத்தல் !! (கட்டுரை)

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசியல் அதிகாரத்துக்கான அதிவலதின் போர் ஒவ்வொரு நாளும் மேலும் தீவிரமடைந்து வருகிறது. கண்டம் முழுவதும் இந்த எழுச்சிமிக்க வலதுசாரி இயக்கங்களை இயக்குவது எது? எந்தச் சர்வதேச சக்திகள் அவர்களை இணைக்கின்றன, ஏன்…

சஜித் மன்னிப்பு கோர வேண்டும் !!

பசறை மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு வருகை தாராத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எனது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்…

சில இடங்களில் மின் விநியோகம் சீரானது !!

கொழும்பு 04, 05 மற்றும் 07 ஆகிய இடங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் உள்ள 132 கிலோ வோற் உப மின்நிலையத்தில் ஏற்பட்ட கேபிள்…

தி​டீரென இருண்டது மருதானை !!

மருதானை உள்ளிட்ட சில பிரதேசங்களில் திடீர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மருதானை உப- மின்நிலையத்தின் மின்வடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே சில பிரதேசங்களுக்கான மின்விநியோகம்…

மெக்சிகோ அதிபருக்கு 3-வது முறையாக கொரோனா பாதிப்பு!!

மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப் ரடோ காய்ச்சலால் அவதிப்பட்டார். பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.…

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட உதய் சிறுத்தை உயிரிழப்பு!!

பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியில் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடியபோது நமீபியா நாட்டின் 8 சிறுத்தை புலிகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார். தென் ஆப்பிரிக்காவில் இருந்து 5 பெண், 3 ஆண்…

5 உறுப்புகளை தானம் செய்து ஐவருக்கு வாழ்வளிப்பு !!

மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 5 உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயல்வேலை முடித்து கிரான் பகுதியிலிருந்து சித்தாண்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார்…

அமெரிக்காவில் பள்ளி கலை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு- 9 பேர் படுகாயம்!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜெஸ்பூரில் பள்ளி உள்ளது. இங்கு நேற்று இரவு நாட்டிய கலைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் திடீரென தான் வைத்து இருந்த…

பிரதமர் மோடி இன்று கேரளாவுக்கு வருகை: 5 ஆயிரம் போலீசார் குவிப்பு!!

பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று (திங்கட்கிழமை) மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். அங்கிருந்து 1.8 கி.மீ. தொலைவுக்கு அவர் ரோடுஷோவில் சென்று தொண்டர்களை…

வெடுக்குநாறிக்கு செல்வதை தடுக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு!!

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.…

தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சி!!

இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.. இதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 145,000 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.. 24 கரட் தங்கம்…

அமெரிக்க ஏரியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி!!

அமெரிக்க ஏரியில் மூழ்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் பலியாகினர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் இண்டியானா போலிஸ் நகரில் மோன்ரோ ஏரி உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் சிதான்ந்த் ஷா(19), ஆர்யன் வைத்யா(20)…

அம்ரித்பால் சிங் சட்ட நடவடிக்கையை சந்தித்தே ஆக வேண்டும்: பஞ்சாப் முதல்வர் கருத்து!!

பிந்தரன்வாலேவுக்கு பிறகு பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கையை முன்னெடுத்தவர் அம்ரித்பால் சிங். நேற்று அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக நடந்து வந்த போலீசாரின்…

கடும் பனிப்பொழிவால் கேதார்நாத் யாத்திரை முன்பதிவு நிறுத்தம்!!

கடும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் இந்து பக்தர்கள்…

அதிக வெப்பத்தால் இருவர் மரணம்!!

எப்பாவலவில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்தார்.…

கம்பளையில் நிலநடுக்கம்!!

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொழுவ பிரதேசத்தில், ஜி.கே டிவிசனில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று (24) அதிகாலை 1.30 மணியளவிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிக் தெரிவித்தனர். நிலத்தில் படுத்திருந்த பலரும் நிலம் அதிர்வதை…

புதையல் தோண்டிய 7 பேர் கைது!!

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று…

அரசியல் கட்சிகளின் தீர்மானமிக்க கூட்டங்கள்!!

ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் இன்று (24) நடைபெற உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின்…