அமரர் பூமணி அன்னையின் 31ஆம் நாள் நினைவாக; மீண்டும் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)

அமரர் பூமணி அன்னையின் 31ஆம் நாள் நினைவாக; மீண்டும் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)
################################
புங்குடுதீவு மண்ணில் பிறந்து சுவிஸ் நாட்டில் அமரத்துவமடைந்த அன்னை பூமணி என அழைக்கப்படும் அமரர் மார்க்கண்டு புனிதவதி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக பல்வேறு சமூகப்பணிகளை அன்னாரின் பிள்ளைகளான திரு.திருமதி ஏகாம்பரநாதன் திலகவதி குடும்பம், திரு.திருமதி சச்சிதானந்தன் குடும்பம், திரு.திருமதி சதானந்தன் குடும்பம், திரு.திருமதி தயானந்தன் குடும்பம் ஆகிய குடும்பங்களின் நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவிகளாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையநாளில் கணவரால் கைவிடப்பட்ட நிலையில் ஒரு மகளுடன் மிகவும் பொருளாதார நெருக்கடியில் வவுனியா ராணிமில் வீதியில் வசித்துவரும் திருமதி புலேந்திரன் துர்க்கா என்ற பெண்தலைமைத்துவ குடும்பத்திற்கு பெரிய கோழிக்கூடு வழங்கப்பட்டது.
முன்னதாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பயணத்தடை நடைமுறையில் இருந்தபோது மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் தாயக உறவுகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. அந்நேரத்தில் குறித்த ராணிமில் வீதி கிராமத்திலும் இவ்வதவி வழங்கப்பட்ட போது மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி திருமதி பிலோமினா அவர்களினால், திருமதி குலேந்திரன் துர்க்கா அவர்களின் நிலமை தெரிவிக்கப்பட்டு அவருக்கான வாழ்வாதார உதவி கோரப்பட்டது.
பின்னர் குறித்த பயனாளின் உதவிகோரல் வீடியோ பதிவு எடுக்கப்பட்டு, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டு பயனாளியாக தேர்வு செய்யப்பட்டார்.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நிலையில் அமரர் பூமணி என அழைக்கப்படும் திருமதி மார்க்கண்டு திலகவதி அன்னையரின் அமரத்துவமடைந்த 31 ஆம் நாள் நினைவாக அன்னாரது பிள்ளைகளினால் வாழ்வாதார உதவியாக கோழிக் கூடு இன்று பலர் முன்னிலையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் தளபதி மாணிக்கதாசன் அவர்களது மருமகனும், சின்னப்புதுக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் தலைவருமான திரு ஸ்ரீஸ்காந்தராஜா அருணன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட கோழிக் கூட்டின் பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திருமதி நவரட்ணம் பவளராணி அவர்கள் பயனாளிக்கான கோழிகளை வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி திருமதி பிலோமினா அவர்கள் கோழிக் கூட்டுக்குள் கோழிகளை வைத்து, வழங்கப்பட்ட வாழ்வாதார உதவியினை ஆரம்பித்து வைக்க நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையவர்களால் கோழிகள் கூட்டுக்குள் விடப்பட்டு வாழ்வாதார உதவி வழங்கள் நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.
முன்னதாக வவுனியா செக்கட்டிப்புலவு கிராமத்தில் தந்தையார் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை செய்யப்பட தாயார் காணாமல் போன நிலையில் அநாதரவாக நின்ற ஐந்து பிள்ளைகளை மிகவும் வறிய நிலையில் பராமரித்து வசித்து வரும் மாவீரரின் பெற்றோரான திரு.பெருமாள் ஆறுமுகம் என்ற வயோதிப குடும்பத்தின் பொருளாதார விருத்திக்காக வாழ்வாதார உதவியாக மிகப் பெரிய கோழிக் கூடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு மட்டுமல்லாது வவுனியா பிரதேசத்தில் உள்ள வறிய சூழ்நிலையில் வாழ்வோரை பல கிராமங்களில் தெரிவு செய்து அவர்களுக்கான வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளை மூன்றுகட்டமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வைக்கப்பட்டது. அவ்வாறே வவுனியா சிதம்பரபுரம், கல்மடு போன்ற மிகவும் பின் தங்கிய கிராமங்களில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
இவ்வாறாக பல்வேறு சமூக நற்பணிகளை தாயக உறவுகளுக்கு வழங்கி தமது தாயாரான அமரர் அன்னை பூமணி அவர்களின் முப்பத்தியோராம் நாளை அன்னாரது பிள்ளைகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அனுஸ்டித்தனர்.
அன்னை அமரர் பூமணி அவர்களின் ஆத்மசாந்திக்காக தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறது.
இதேவேளை வாழ்வாதார உதவிகளை வழங்கிய அன்னை பூமணி அவர்களின் குடும்பந்தினருக்கு நன்றியினையும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
19.10.2021
அமரர் பூமணி அன்னையின் 31 ஆம் நாள் நினைவாக; மீண்டும் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1