;
Athirady Tamil News

மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !!

0

மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருந்த போதிலும், அமைச்சர்கள் இருவர், அதனை தடுத்துவிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகலரும், கடந்த 4 ஆம் திகதியன்று தங்களுடைய இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருந்தனர்.

அதன்பின்னர், பிரதமருடன் அந்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது, தானும் பதவி விலகுவதற்கு தீர்மானித்துவிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகிய இருவரும், இன்னும் சிலரும் இராஜினாமா செய்யவேண்டாம் என ​கடுமையான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வார் எனின், அரசியலில் இருந்தே தாங்கள் ஓய்வு பெறுவோம் என அறிவித்துள்ளனர்.

அச்சந்தர்ப்பத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய இராஜினாமா கடிதத்தை தயார் செய்திருந்தார் எனினும், கையொப்பமிடவில்லை.

இந்நிலையில், பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, தனது முடிவை பிரதமர் மாற்றிக்கொண்டார் என்றும் அறியமுடிகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.