அரசாங்க மருத்துவமனையில் இப்படி ஒரு அவலம்!
கேகாலை மாவட்டத்தில் உள்ள மகாபல்லேகம அரச மருத்துவமனை நோயாளிகள், போதிய உணவு இல்லாமல் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மருத்துவமனையில் உணவு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால், கடந்த 4 ஆம் திகதி முதல் உள்நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உணவு இல்லாமல் தவித்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த உணவு ஒப்பந்தத்தை கூட்டுறவு சங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக , உள்நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொ ணடுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.