அப்பாவிடம் போரை நிறுத்த சொல்லுங்கள்! புடினின் ரகசிய மகள் வருத்தத்துடன் கூறிய பதில்
பிரான்ஸின் பாரிஸில் நகரில் நிருபர் ஒருவரின் கேள்விகளுக்கு முகத்தை மறைத்தபடி, விளாடிமிர் புடினின் ரகசிய மகள் பதிலளித்தார்.
லூயிஸா ரோஸோவா
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) ரகசிய மகள் என்று கூறப்படுபவர் லூயிஸா ரோஸோவா. இவர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தற்போது இருக்கிறார்.Vladimir Putin/Luiza Rozova
முகத்தை மறைத்தபடி தெருக்களில் சென்ற லூயிஸாவை அடையாளம் கண்ட நிருபர் Sviatnenko, அவரிடம் உக்ரைன் போரை நிறுத்தச் சொல்வது முதல் பல கேள்விகளை முன் வைத்தார்.
அதற்கு லூயிஸா ரோஸோவாவும் (Luiza Rozova) பதில்கள் அளித்ததுடன், தன்னிடம் வந்த கேள்வி கேட்ட நிருபரின் தைரியத்தை பாராட்டினார்.
நீங்கள் உங்கள் தந்தையின் கொள்கைகளை ஆதரிக்கிறீர்களா? என்ற Sviatnenkoயின் கேள்விக்கு பதிலாக ‘அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?’ என்று லூயிஸா கேட்டார்.
பின்னர் அவர், ‘சரி, அவர் உங்கள் தந்தை. குறைந்தபட்சம் நீங்கள் இப்போதே அவரை அழைத்து, “அப்பா, கீவ் மீது ஷெல் தாக்குதல் நடத்துவதை நிறுத்துங்கள்” என்று சொல்லலாம் என்று கூற, ‘சரி, நிச்சயமாக’ என்றார் லூயிஸா.
மேலும் சில கேள்விகளை லூயிஸாவிடம் முன்வைத்தார் Sviatnenko. அப்போது உக்ரைனில் மக்கள் மீது புடின் தாக்குதல் நடத்துவதற்கு வருந்துவதாக லூயிஸா கூறினார்.
நீங்கள் ஏன் பாரிஸில் வசிக்கிறீர்கள்? எடுத்துக்காட்டாக, மாஸ்கோவில் இல்லை? என்ற நிருபரின் கேள்விக்கு “நான் மாஸ்கோவை சேர்ந்தவள் அல்ல” என்று லூயிஸா பதிலளித்தார்.