இலங்கையில் நேர்ந்த துயரம் – பெண்ணின் உயிரை பறித்த தேங்காய்
ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி சுனேத்ரா குணதிலகா என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
தனது வீட்டிற்கு அருகிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பலத்த காயங்களுடன் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.