;
Athirady Tamil News

புளொட் தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. பகுதி இரண்டு.. (வீடியோ, படங்கள்)

0

புளொட் தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. பகுதி இரண்டு.. (வீடியோ, படங்கள்)

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில், இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் என்பது குறிப்பிடத்தக்கது..

இதனை முன்னிட்டு புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளான தை பதினான்காம் திகதியை “மாணிக்கப் பொங்கல் நாளாக” கொண்டாடும் முகமாக,

அடிப்படை வசதிகள் குறைகளைக் கொண்ட வன்னி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை தத்தெடுத்து அங்கு வாழும் குடியிருப்பாளர்களுக்கும், இன மத வேறுபாடில்லாமல் பொங்கல் நிகழ்வைக் கொண்டாட “பொங்கலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும்” அடங்கிய பொதியினை குறித்த கிராமத்திற்கு கிராம அபிவிருத்தி சங்கம் அனுமதியுடன் வழங்குகிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

புலம்பெயர் வாழும் புளொட் இயக்கத்தின் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கப் பொங்கலுக்கான” பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்வாக ஐந்து தினத்துக்கு முன்னர் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம பிரிவான பூவரசன்குளம் பகுதியுள்ள கோயில் மோட்டை, வேலங்குளம், முரசு மோட்டை, கற்பகபுரம், சின்னத்தம்பனை சேர்ந்த வறிய மக்களுக்கு பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பானைகள் தேவையென கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் இராசையா சங்கர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்தார்.

இவ் நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் அவர்களின் “ஜனன தினத்தை” முன்னிட்டு அமரர் தோழர். மாணிக்கதாசன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவர்களுக்கான “மாணிக்கப் பொங்கல்” எனும் பொங்கல் பானை, மற்றும் பொங்கலுக்குரிய பொருட்களும் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் மூன்று தினங்களுக்கு முன்னர் இரண்டாவது நிகழ்வாக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கோனாவில் கிராமத்தில் உள்ள வறுமையில் இருந்தாலும் நாங்களும் பொங்கல் பொங்க வேண்டும் என்று ஆசைப்படும் 10 குடும்பங்களுக்கு கோனாவில் மாதர் சங்கத்தின் உப தலைவவி கோபிநாத் பிரசாந்தினி அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய இன்றைய தினம் 10குடும்பங்களுக்கும் பொங்கல் பொதி வழங்கப்பட்டது.

உதவிகளைப் பெற்றுக் கொண்டபின் கருத்து தெரிவித்த அவ்வூர் பெண்கள், மற்றும் அவ்வூர் மக்கள் “தைத்திரு நாளன்று” குழந்தைகளோடு பொங்கிமகிழ சந்தர்ப்பத்தை வழங்கிய, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும், இதற்கென நிதி உதவியளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்” நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

நிதிப் பங்களித்தோர் விபரம் 

மேற்படி “கல்விக்கு கரம் கொடுப்போம் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டத்துக்கும், நிகழ்வுகளுக்கும் நிதிப் பங்களிக்க உள்ளோர் விபரம் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளையின் செயலாளர் தோழர்.தயாளன், சுவிஸ் தோழர்களான லெனின் எனும் செல்வபாலன், ரமணன், போன்றோர் தங்களின் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் கழகத்தின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் தோழர் ரஞ்சன் அவர்களின் திட்டமிடல், ஒழுங்குபடுத்தல், நிதிப் பங்களிப்பில் இந்நிகழ்வுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த புலம்பெயர் புளொட் தோழர்களுக்கு தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு,

இன்றைய நாளில் ஜனன தினத்தை காணும் அமரர்.மாணிக்கதாசன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் மனதார வேண்டி பெருமை கொள்கிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
14.01.2026

புளொட் தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. பகுதி இரண்டு.. (வீடியோ)

தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.! படங்கள் & வீடியோ..
https://www.athirady.com/tamil-news/news/1821237.html

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று)
https://www.athirady.com/tamil-news/infomation/1444531.html

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..

https://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..

https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.