;
Athirady Tamil News

வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து

0

வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டெய்னர் லொறி மற்றும் மாட்டுசாணம் ஏற்றி வந்த லொறி ஒன்றும் மோதியதில் லொறி கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது.

இந்த விபத்தால் ஏ9 வீதியின் போக்குவரத்து சுமார் 03 மணிநேரம் தடைப்பட்டதுடன், நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நின்றதாக கூறப்படுகின்றது.

அதிக பனிமூட்டம் காரணமாக விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.