;
Athirady Tamil News

ஈரான்-ரஷ்யா தலைவர்கள் தொலைபேசி கலந்துரையாடல் ; போரைத் தணிக்க முன்னுரிமை

0

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் (Masoud Pezeshkian) இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடலை நடத்தினார்.

இந்த கலந்துரையாடலை ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் குறித்து தகவல்களை வெளியிட்டு, பின்னர் அல்ஜெஸீரா செய்தி நிறுவனம் இதை மேற்கோள் காட்டியது.

புடின், பிராந்தியத்தில் நிலவும் மோதல்களை விரைவாகத் தணிப்பதை முன்னுரிமையாகக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேவேளை, தற்போதைய பதற்ற சூழ்நிலையை இராணுவ ரீதியில் அணுகுவதற்குப் பதிலாக அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை காண வேண்டும் என்பது ரஷ்யாவின் நிலைப்பாடு என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த தலையீடு சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.