;
Athirady Tamil News

பாரசீக வளைகுடாவில் பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள் ; தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு

0

ஈராக் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரியும் கப்பல்களிலிருந்து 38 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈராக் துறைமுக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாரசீக வளைகுடா பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த ‘Zefyros’ மற்றும் ‘Safesea Vishnu’ ஆகிய இரண்டு கப்பல்களுமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

 ஈரான் பொறுப்பு

இதில் ‘Safesea Vishnu’ கப்பலானது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். இந்தத் தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்றுள்ளது.

“நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் மூலம் இன்று இரவு பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தகர்க்கப்பட்டன” என்று ஈரானின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஈரானிய படகு ஒன்று கப்பல்கள் மீது மோதியிருக்கலாம் என ஈராக் பாதுகாப்புத் தரப்பு சந்தேகிக்கிறது.

தாக்குதலை அடுத்து எண்ணெய் கசிவு காரணமாக கடல் முழுவதும் தீ பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து எண்ணெய் துறைமுகங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஈராக்கின் இறையாண்மையை மீறும் இந்தச் செயலுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சாத் மான் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.