;
Athirady Tamil News

ஈரானின் தீவிர ஆக்கிரமிப்பில் லெபனான் உள்ளது: இஸ்ரேல் குற்றச்சாட்டு

0

டெல் அவிவ்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கியதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது.

இந்நிலையில், ஈரானின் ஆக்கிரமிப்பில் லெபனான் உள்ளது என இஸ்ரேல் குற்றச்சாட்டாக கூறியுள்ளது. இஸ்ரேல் வெளியுறவு துறை மந்திரி கிதியோன் சார் இன்று கூறும்போது, லெபனானில் உள்ள ஈரானின் தூதர் முகமது ரெசா ஷிபாவை வெளியேறும்படி லெபனான் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் கெடு விதித்தது. ரெசா வெளியேறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. இருந்தபோதும், தன்னுடைய முடிவை லெபனானால் இன்னும் செயல்படுத்த முடியவில்லை என்று குற்றச்சாட்டாக கூறினார்.

இன்று காலை ஈரான் தூதர் ரெசா, பெய்ரூட் நகரில் காபி குடித்து கொண்டிருக்கிறார். ஹிஸ்புல்லா மந்திரிகளும் லெபனான் அரசில் அவர்களுடைய வேலையை தொடர்ந்து வருகின்றனர் என்றும் கூறினார். லெபனான் வீரம் நிறைந்த நாடு. ஆனால், ஈரானில் ஆக்கிரமிப்பில் இருப்பது தெளிவாக தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

2024-ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்த விதியை மீறி கடந்த 2-ந்தேதி முதல் லெபனான் பிராந்தியத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பு ஏவியுள்ளது. இந்த தாக்குதல் தீவிர விதிமீறலாகும் என்றும் அவர் கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.