;
Athirady Tamil News

தெஹ்ரான் மீது இஸ்ரேலின் பாரிய வான்வழித் தாக்குதல் ; 400-க்கும் அதிகமான இலக்குகள் தகர்ப்பு

0

கடந்த இரண்டு நாட்களில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலுள்ள உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து 400-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஈரானிய ஆட்சியின் உட்கட்டமைப்புகளுக்கு எதிராக 650 வெடிமருந்துகளைப் பயன்படுத்தி 400-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேலிய வான்படை மேற்கொண்டுள்ளது.

ஈரானிய தலைநகரின் மையப்பகுதியிலுள்ள பல இடங்களை இலக்கு வைத்து நேற்றிரவு பாரிய அளவிலான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தத் தாக்குதல்களில் சுமார் 15 ஆயுத உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் உரிமை கோரியுள்ளது.

இதில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய ஒரு மத்திய வளாகமும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தெஹ்ரானுக்கு உள்ளேயும் வெளியேயும் இடைவிடாது நடத்தப்பட்டு வரும் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.