;
Athirady Tamil News

சித்திரை புத்தாண்டு காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

0

சித்திரை புத்தாண்டு காலத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வைத்திய நிபுணர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அபிவிருத்தி பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட விசேட வைத்திய நிபுணர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்க்கரை அளவு
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சித்திரை புத்தாண்டு என்றாலே பாரம்பரிய உணவுகள் தவிர்க்க முடியாதவை. இருப்பினும், ஒரு வேளை உணவின் போது ஏதேனும் ஒரு வகை இனிப்புப் பண்டத்தை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உட்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல், பால் தேநீர் அருந்துவதைத் தவிர்த்து, சர்க்கரை சேர்க்காத தேநீரை அருந்துவது சிறந்தது.

உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது, அங்குள்ள உணவுகளில் உங்களுக்குப் பிடித்தமான ஒன்றினை மாத்திரம் தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தவிர்க்க முடியும்.

இவ்வாறான சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.