;
Athirady Tamil News

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

0

பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், லக்கல பிரதேசத்தை சேர்ந்த பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் நேற்று (29) அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் பயன்படுத்திய சொகுசு காரொன்றையும் லக்கல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மாணவ – மாணவிகளுக்கு இடையே காதல்
கைது செய்யப்பட்ட ஆசிரியர், மாணவிகளை மாத்தளை – நக்கிள்ஸ் (Knuckles) சூழல் பகுதிக்கு அழைத்து சென்று, தனது வாகனத்திற்குள்ளேயே வைத்து அவர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பல தகவல்கள் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், குறித்த ஆசிரியரை மாணவியொருவரின் தந்தை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடொன்று கிடைத்துள்ளது.

அந்த முறைப்பாடு தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து விரிவாக விசாரணை செய்தபோது, அங்கு நடந்த பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

லக்கல, பகமூன மற்றும் நாவுல ஆகிய பிரதேசங்களில் மிகவும் பிரபலமானவராக கருதப்படும் இந்த ஆசிரியர், தனது பிரத்தியேக வகுப்புகளுக்கு வரும் மாணவ – மாணவிகளுக்கு இடையே காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி ஆசிரியரும் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.