யாழில். “இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்”
;
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முன்னணி பாடசாலைகளான சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் கிரிக்கெட் அணிகள் மோதும் “இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்” (Battle of the Hindu brothers) 3ஆவது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சொந்த மைதான சாதகத்துடன் களம் காணும் மானிப்பாய் இந்துக்கல்லூரி அணிக்கு, சாவகச்சேரி இந்துக்கல்லூரி அணி பலத்த சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் இப்போட்டியைத் தொடர்ந்து, இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்களுக்கு இடையிலான விசேட T20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் குறித்த போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் , யாழில் நிலவிய சீரற்ற காலநிலையால் போட்டிகள் பிற்போடப்பட்டு , 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
