;
Athirady Tamil News

அயர்லாந்து ஜனாதிபதியின் சகோதரியை கடத்திய இஸ்ரேல்?

0

காஸாவுக்கு விரைந்த நிவாரணப் படகுகள் இஸ்ரேலியப் படைகளால் இடைமறிக்கப்பட்டு, தனது சகோதரி கடத்தப்பட்டுள்ளதாக அயர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிப்பதாக அயர்லாந்து ஜனாதிபதி கேத்ரின் கொன்னொலி தெரிவித்துள்ளார். ‘

குளோபல் சுமுத்’நிவாரணப் படகுக் குழுவிலிருந்து இஸ்ரேலியப் படைகளால் அழைத்துச் செல்லப்பட்ட ஆறு அயர்லாந்து பிரஜைகளில், அயர்லாந்து ஜனாதிபதியின் சகோதரியான மார்கரெட் கொன்னொலியும் ஒருவர் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது முற்றிலும் கொடூரமானது….
லண்டனில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அயர்லாந்து ஜனாதிபதி கொன்னொலி,

“இந்தச் சம்பவம் மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்றும் அவருடன் படகில் இருந்த ஏனைய சகாக்கள் குறித்தும் தாம் பெரும் கவலையடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 33 அயர்லாந்து பிரஜைகள் இஸ்ரேலால் இதுபோன்ற சம்பவங்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தமது அரசாங்கம் இஸ்ரேலுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிப்பதா இல்லையா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறதாகவும் அயர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் கொடூரமானது இந்த இனப்படுகொலைக்குத் துணைபோகும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் நிலைப்பாடு முழுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்” என்றும் அயர்லாந்து ஜனாதிபதி கொன்னொலி மேலும் தெரிவித்த்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.