;
Athirady Tamil News

பிரித்தானியாவின் One In, One Out திட்டம்: தலைமறைவாகும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

0

பிரித்தானியாவின் ’One in, one out’ திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர், மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பி தலைமறைவாக வாழ்ந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

One In, One Out திட்டம்…
பிரித்தானியாவும் பிரான்சும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.

தலைமறைவாகும் புகலிடக்கோரிக்கையாளர்கள்
அப்படி One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிலர், லொறி மூலம் மீண்டும் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளது தற்போது தெரியவந்தது.

அதாவது, One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களைத் தேடிக்கண்டுபிடிக்கும் ஆட்கடத்தல்காரர்கள், அவர்களை மிரட்டி, தங்களுடன் இணைந்து வேலை செய்யும்படி கட்டாயப்படுத்துவதாக, மீண்டும் பிரித்தானியா வந்துள்ள சிலர் தெரிவித்துள்ளார்கள்.

சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய கடத்தல்காரர்கள் 1,000 முதல் 2,000 பவுண்டுகள் மூலம் வசூலிக்கும் நிலையில், லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய ஆளுக்கு 4,000 முதல் 5,000 பவுண்டுகள் வசூலிக்கிறார்களாம்.

ஆக, One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிலர், பிரான்சில் நிலைமை மோசம் என்றும் அங்கு வாழமுடியாது என்றும் கூறுகிறார்கள்.

ஆகவே, அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கே சட்டவிரோதமாக லொறிகள் மூலம் திரும்புவதுடன், தலைமறைவாகவும் வாழ்ந்துவருகிறார்களாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.