ஒன்பது மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக இரண்டு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது என சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (11) நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், ருகுணு பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 341 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 327 மனித என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மனித என்பு குவியலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது – என்றார்.