;
Athirady Tamil News

வெள்ளை மாளிகையில் டிரம்பின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.500 கோடி செலவில் சண்டைப்போட்டி

0

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 250-வது ஆண்டு விழா மற்றும் ஜனாதிபதி டிரம்பின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, வெள்ளை மாளிகை வளாகத்தில் உலகப் புகழ்பெற்ற ‘யு.எப்.சி’ சண்டைப் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி வாஷிங்டனில் உள்ள லிங்கன் நினைவிடத்தில் நடந்த வீரர்களின் அறிமுக விழாவில் பங்கேற்க, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

அப்போது கடும் நெருக்கடிகள் மத்தியில் ரசிகர்கள் தங்கள் ஆதரவு வீரர்களைக்காண குவிந்ததால் அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது. இதற்காக சுமார் ரூ.500 கோடி (60 மில்லியன் டாலர்) செலவிடப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க பொது இடத்தை தனியார் வணிகப் போட்டிக்கு பயன்படுத்துவதாக கூறி தொடரப்பட்ட வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், இந்த பிரமாண்ட சண்டைப்போட்டிகள் நடைபெறுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.