பிள்ளைகளின் கண் முன்னே பறிபோன தந்தையின் உயிர் ; நடுவீதியில் நடந்த அசம்பாவிதம்
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை – வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சேற்றில் சிக்கியிருந்த லொறி ஒன்றை ட்ராக் ரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு வீதிக்கு எடுப்பதற்காக, வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற முறையில் கேபிள் கம்பி ஒன்று இழுக்கப்பட்டிருந்தது.
இருவர் கைது
இதன்போது, வெஹிகல திசையிலிருந்து கடுவலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த கேபிளில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த அவரது 14 வயதுடைய இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் வெஹிகல பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய ட்ரக் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற லொறியின் உரிமையாளர் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.