;
Athirady Tamil News

எபோலா தொற்று உயிரிழப்பு 200-ஐ கடந்தது!

0

காங்கோ, உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200-ஐ கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இப்புதிய வகை தொற்றுப் பாதிப்பில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் காங்கோவின் கிழக்கு மாகாணமான இதுரியிலேயே பதிவாகியுள்ளன. மேலும், இத்தொற்று அண்டை நாடான உகாண்டாவுக்கும் பரவி, அங்கு 19 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இருவா் உயிரிழந்துள்ளனா்.

இத்தொற்று பாதிப்பு கடந்த வாரத்தைவிட தற்போது 38 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதுவரை 894 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முந்தைய பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஆரம்பக் கட்டத்திலேயே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய அலையாக இது பதிவாகியுள்ளது.

தற்போது பரவி வரும் எபோலா பாதிப்பு ‘பண்டிபுக்யோ’ எனும் அரிய வகையால் ஏற்பட்டுள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான மருந்துகளோ இன்னும் கண்டறியப்படவில்லை. அதேபோல் தொடா் உள்நாட்டு மோதல்கள், அடா்ந்த காடுகள் நிறைந்த புவியியல் அமைப்பு காரணமாக, நோய் தடுப்புப் பணிகள் பெரும் சவாலாக மாறியுள்ளன.

இச்சூழலை எதிா்கொள்ளப் போதிய நிதியும், மருத்துவப் பணியாளா்களும் இல்லாதது நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது. இந்த எபோலா ஒழிப்புப் பணிகளுக்காக உலக நாடுகளால் உறுதியளிக்கப்பட்ட 90 கோடி டாலா் நிதியில், இதுவரை 9 கோடி டாலா் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.