;
Athirady Tamil News

அதிகாலை பெரஹர யானையினால் ஏற்பட்ட பெரும் பதற்றம் – இருவர் பரிதாபமாக பலி

0

இரத்தினபுரி – ரக்வானை பகுதியில் விகாரையொன்றில் நடைபெற்ற 78 ஆவது பொசன் பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட யானையொன்று இருவரை தாக்கி கொன்றுள்ளது.

நேற்றிரவு (21) நடைபெற்ற பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட இரண்டு யானைகள் விகாரை அருகில் கட்டப்பட்டிருந்தன.

யானையை பிடிக்க நடவடிக்கை
இதன்போது இன்று காலை, யானை பாகனின் உதவியாளர், யானைகளில் ஒன்றுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக யானையை ரக்வானை ஆற்றிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

இதன்போது, ​​ஆத்திரமடைந்த யானை, உதவியாளரைத் தாக்கி மிதித்துக்கொன்றதாக கூறப்படுகின்றது. உதவியாளரின் அலறல் சத்தத்தை கேட்டு உதவ வந்த யானை, யானை பாகனையும் தாக்கியுள்ளதுடன், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, யானை விகாரைக்கு அருகிலுள்ள வயலுக்கு தப்பிச்சென்றுள்ளதுடன், வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

யானைக்கு மயக்க மருந்து கொடுத்து பிடிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகளால் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.