;
Athirady Tamil News

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல் – யாழ்.மாநகரசபையால் ஆரம்பம்

0

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல் – யாழ்.மாநகரசபையால் ஆரம்பம்

யாழ்.மாநகரசபையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மின்விளக்குகளை தேவையான இடங்களின் பொருத்தும் பணியினை யாழ்.மாநகரசபை ஆரம்பித்துள்ளது. நீண்டகாலத்தின் பின்பு புதிய மாநகரசபை முதல்வராக பொறுப்பேற்ற திருமதி மதிவதனிவிவேகானந்தராசா அவர்களின் வழிகாட்டலில் புதிய மின்விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

யாழ்.மாநகரசபையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மின்விளக்குகளை ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் தலா 25 மின்விளக்குகள் என்ற ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டு வட்டார ரீதியாக பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம்வடமேற்கு வட்டாரத்தில் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினரான ப.தர்சானந்தினால் மேற்படி மின்விளக்குகள் வட்டாரத்தின் பகுதிகளில் பரவலாகப்பொருத்தப்பட்டுள்ளன.

”ஆத்திசூடிவீதி மற்றும் உள் ஒழுங்கைகள், பிறவுண்வீதி மற்றும் உள் ஒழுங்கைகள், சபாபதி வீதி மற்றும் உள் ஒழுங்கைகள் , நாச்சிமார் கோவிலடி என்பனவற்றில் முதற்கட்டமாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஏனைய ஒழுங்கைகளுக்கும் தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தப்படும்” என யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரத்தின் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் உறுப்பினரான ப.தர்சானந் தெரிவித்ததுடன், புதிய மின் விளக்குகளை பொருத்தி ஒளியூட்டிய வட்டார உறுப்பினருக்கும், யாழ்.மாநகரசபைக்கும் ஒழுங்கை வாழ்.மக்கள் நன்றியினைத்தெரிவித்துக்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.