;
Athirady Tamil News

கதிர்காம திருவிழாவுக்காக புதிய இணையத்தளம்

0

ருஹுணு மஹ கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெராவைக் காணச் செல்லும் பக்தர்களுக்கு, 2026 ஜூலை 15 முதல் ஜூலை 30 வரை கதிர்காம நகரத்தில் வாகன தரிப்பிடங்களைக் கண்டறிய உதவுவதற்காக, இலங்கை பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணையத்தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

இந்த இணையத்தளம் மூலம், கிடைக்கும் வாகன தரிப்பிடங்கள் குறித்த தகவல்களை நிகழ்நேரத்தில் (real-time) பெற்றுக்கொள்ளவும், அருகில் உள்ள வாகன தரிப்பிடங்களைக் கண்டறியவும் பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கூகுள் வரைபடங்கள் (Google Maps) ஊடாக வாகன நெரிசல் குறைந்த எளிதான வழிகாட்டல்களையும் இது வழங்குகிறது.

மேலதிக வசதியாக, அவசர காலங்களில் தொடர்புகொள்ள வேண்டிய அவசர சேவை நிலையங்களின் விபரங்கள் மற்றும் அவற்றின் இருப்பிடங்கள் கூகுள் வரைபடத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

வருடாந்த பெரஹெரா காலத்தில் கதிர்காமப் பகுதியில் வாகன நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.