கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் பூத்தவுடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட நிலையில் , யாழ்.ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில் , தனது 47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார்
அவரது பூதவுடல் இலங்கைக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு , இரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்த நிலையில் , யாழ்.ஊடக அமையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதன் போது , ஊடகவியலாளர்கள் , ஊடக பணியாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,என பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு , பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து , பூதவுடல் கொக்குவிலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமை 09.30 மணியளவில் இறுதி கிரியைகள் இடம்பெற்று , 11 மணியளவில் தகன கிரியைகளுக்காக பூதவுடல் , கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என குடும்பத்த்தினர் அறிவித்துள்ளனர்.