இவர்களுக்கு இனி அரச சேவை கிடையாது ; வெளியான அதிரடி அறிவிப்பு
அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவர்களுக்கு இனி அரச சேவை கிடையாது ; வெளியான அதிரடி அறிவிப்பு | Child Crime Accused Face Government Job Ban
இதற்கமைய, பொலிஸார் அல்லது தொடர்புடைய உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மூலம் இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் தங்களது சேவைத் தேவைகள் மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறும்போது, குறித்த காலப்பகுதியில் தாங்கள் சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதற்கான இந்தச் சான்றிதழை புதுப்பித்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.