ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் தியாக தீபத்தின் உருவ படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாணவர்கள் , விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.