சங்கு கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் மயூரன் விலகினார்!
சங்கு கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் மயூரன் விலகினார்!
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பதவியில் இருந்தும், மாவட்ட குழுவில் இருந்தும் விலகுவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் கூட்டணியின் செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே குறித்த பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளருக்கு அவர் இன்று (16.09) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் ரெலோ சார்பாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயற்பாடுகளில் மாவட்ட இணைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.