குதிரை அணிவகுப்பு மற்றும் மேலைத்தேய இசையுடன் நெடுந்தீவில் யாழ் ஆயருக்கு அமோக வரவேற்பு!
;
அங்கு பங்கு அருட்பணிச்சபையினரால் வரவேற்கப்பட்ட ஆயர் , குதிரை வீரர்களின் அணிவகுப்புடன் நெடுந்தீவின் பிரதான வீதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்.
இவ்வரவேற்பு நிகழ்வில், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி மாணவிகளின் மேலைத்தேய இசைப் பாண்ட் அணிவகுப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார், அருட்சகோதரி மரினா சகாயம், அருட்சகோதரி சோதிநாயகி, ஆயரின் செயலாளர் அருட்பணி கமல்ராஜ் அடிகளார் உள்ளிட்ட அருட்பணியாளர்கள், துறவியர்கள் மற்றும் இறைமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.