;
Athirady Tamil News

அமெரிக்கா: 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதல்; 3 பேர் பலி

0

வாஷிங்டன்

அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள்.

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரின் அருகே மெக்மின்வில் என்ற சிறிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளும், விவசாய பண்ணைகளும் நிறைந்துள்ளன.

இந்நிலையில், வழக்கம்போல இந்த விமான நிலையத்தின் அருகே இரு ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து கொண்டிருந்தன. அப்போது, அந்த 2 ஹெலிகாப்டர்களும் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதி அருகில் இருந்த விவசாயப்பண்ணை நிலத்துக்குள் விழுந்து நொறுங்கின.

போக்குவரத்து முடக்கம்
இந்த விபத்தில் ஓரிகானை சேர்ந்த விமானி டைலர் ஸ்டர்டேவண்ட் என்பவர் பலியானார். இதுதவிர, டெக்சாஸை சேர்ந்த பெண் விமான பயிற்றுவிப்பாளர் மேடி ஆஸ்போ மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பயிற்சி விமானி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அமெரிக்க விமானப்போக்குவரத்து வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விபத்தில் விமானி டைலர் ஒரு ஹெலிகாப்டரிலும், மற்ற 2 பேர் வேறொரு ஹெலிகாப்டரிலும் பயணித்து உள்ளனர். விபத்தில், ஹெலிகாப்டர்கள் நொறுங்கி பல துண்டுகளாக உடைந்து விழுந்தன. இதனால், அந்த பகுதியையொட்டிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் முடங்கியது. பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.