;
Athirady Tamil News

சவூதி விமான சேவைகள் தொடா்ந்து ரத்து: இந்திய பயணிகள் தவிப்பு!

0

பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகளை இந்திய விமான நிறுவனங்கள் தொடா்ந்து ரத்து செய்துள்ளன.

இதன் காரணமாக, சவூதியில் சிக்கியுள்ள இந்தியப் பயணிகளுக்கு உதவ உள்ளூா் அதிகாரிகளுடன் இணைந்து தொடா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் பரந்த மோதலுக்கு மத்தியில், ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளா்ச்சி அமைப்பினா், சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்துகின்றனா்.

கடந்த அக்.21-ஆம் தேதி சவூதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள கிங் ஃபஹத் சா்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 2 இந்தியா்கள் காயமடைந்தனா்.

இதேபோல், கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஷேபா எண்ணெய் வயலில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியா் காயமடைந்தாா். சவூதியில் விமான நிலையங்கள், எரிசக்தி மையங்கள் உள்பட பொது உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனிடையே, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபிய நகரங்களுக்கான விமான சேவையை இந்திய நிறுவனங்கள் தொடா்ந்து ரத்து செய்து வருகின்றன.

ஜெட்டா, ரியாத், தம்மாம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களை நவ.14 வரை ரத்து செய்வதாக, ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ நிறுவனங்கள் சில தினங்களுக்கு முன்னா் அறிவித்தன.

இந்நிலையில், ஜெட்டா நகருக்கான விமான சேவையை நவ.18 வரையும், ரியாத் நகருக்கான விமான சேவையை நவ.30 வரையும் ரத்து செய்வதாக ஆகாசா ஏா் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதேநேரம், சவூதி விமான நிறுவனங்கள் மட்டும் சில விமானங்களை இந்தியாவுக்கு இயக்கி வருகின்றன.

சவூதி அரேபியாவில் ஏராளமான இந்தியா்கள் பணியாற்றி வருகின்றனா். அத்துடன், மெக்கா புனிதப் பயணத்துக்காக சென்ற இந்திய பயணிகளும் அங்குள்ளனா். விமான சேவைகள் ரத்து காரணமாக, இந்தப் பயணிகள் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனா்.

அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும், மாற்று பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உள்ளூா் அதிகாரிகளுடன் இணைந்து தொடா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சவூதியில் உள்ள இந்தியா்கள் விழிப்புடன் செயல்படவும், வான்வழித் தாக்குதல் நடக்கும்போது தங்குமிடங்களிலேயே இருக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.