யாழில் ரின் இலக்கம் பெற மிகநீண்ட வரிசை
யாழில் ரின் இலக்கம் பெற மிகநீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று (02.11.2026) மக்கள் மீண்டும் மிக நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது.
அதேசமயம் சில முக்கிய தேவைகளை நிறைவேற்ற வரி செலுத்துவோர் அடையாள அட்டை இலக்கம் நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.