;
Athirady Tamil News

யாழில் வெடித்த புதிய சர்ச்சை ; பெரும் குழப்பத்தில் மக்கள்

0

யாழ்ப்பாணம் கந்தரோடையில் தொல்லியல் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்றினை வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

குறித்த பகுதிக்கு சனிக்கிழமை தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட பௌத்தர்கள் புத்தர் சிலையினை அங்கு வைத்து வழிபாடுகளை மேற்கொள்வதுடன் , “பிரித்” ஓதி சமய சடங்குகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் , அப்பகுதி மக்கள் மத்தியில் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன சிலை நிறுவதற்கோ , புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளவே , பிரதேச சபையிடமோ , தொல்லியல் திணைக்களத்திடமோ எவ்வித அனுமதிகளும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்றைய தினம் அங்கு வைத்து வழிபாடு செய்யும் புத்தர் சிலையானது , திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு எடுத்து செல்லப்பட்டு , அங்கு பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிய முடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.