ஹோர்முஸ் நீரிணையில் 2 எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்தது: ஈரான் புரட்சி படை அதிரடி எச்சரிக்கை
அமெரிக்க போர் விமானங்களின் பாதுகாப்பில் சென்ற இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்ததாக ஐஆர்ஜிசி (IRGC) தெரிவித்துள்ளது.
தெஹ்ரான் தரப்பில் “அனுமதியற்ற பாதை” என்று குறிப்பிடப்படும் வழியைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையில் ஒரு சூப்பர் டேங்கர் (மிகப்பெரிய எண்ணெய் கப்பல்) உட்பட இரண்டு எண்ணெய் கப்பல்களில் தீப்பிடித்துள்ளதாக ஐஆர்ஜிசி (IRGC) தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில், தெஹ்ரான் குறிப்பிடும் “அனுமதியற்ற பாதையைப்” பயன்படுத்திய இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் — அவற்றில் ஒன்று மிகப்பெரிய அளவிலான டேங்கர் (supertanker) — தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் இஸ்லாமிய புரட்சி காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு தொலைக்காட்சியின் செய்தியின்படி, IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவற்றில் ஒரு மிகப்பெரிய டேங்கர் கப்பல், கடலில் வைக்கப்பட்ட கண்ணிவெடியில் (naval mine) மோதி வெடித்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களின் போர் விமானங்களின் பாதுகாப்பில், சட்டவிரோதமான இந்தப் பாதையின் வழியாக ரகசியமாகக் கடந்து செல்ல முயன்ற இரண்டாவது டேங்கர் கப்பல் விபத்துக்குள்ளாகி, பெரும் தீப்பிழம்புகளுடன் அதே இடத்தில் நின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “இந்த அனுமதியற்ற பாதை பாதுகாப்பற்றது; பயங்கரவாத மற்றும் ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்ட அமெரிக்க ராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, இந்தப் பாதையின் வழியாகச் செல்ல முனையும் அனைத்துக் கப்பல்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்” என்று மீண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
