;
Athirady Tamil News

துபாய்: பூக்களுக்கு பதில் 6.5 கிலோ தங்கத்தில் பிரம்மாண்ட ரங்கோலி!

0

துபாய்,

துபாயில் 6.5 கிலோ தங்கம் மற்றும் 380 காராட்டுக்கும் அதிகமான வைரங்களைப் பயன்படுத்தி பிரம்மாண்ட ரங்கோலி உருவாக்கப்பட்டது.

பிரம்மாண்ட ரங்கோலி

துபாயில் உள்ள பிரபல சிட்டி சென்டர் டெயிரா ஷாப்பிங் மாலில் பிரபல டாமாஸ் ஜுவல்லரி எனப்படும் நகை நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் தீபாவளி மற்றும் ‘பெஸ்டிவல் ஆப் லைட்ஸ்’ கொண்டாட்டங்களை முன்னிட்டு தங்கம் மற்றும் வைரங்களால் ஆன பிரம்மாண்ட ரங்கோலி உருவாக்கப்பட்டது.

நகைகளால் மின்னும் கலைப்படைப்பு

2×2 மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரங்கோலியில், 6.5 கிலோ தங்கம் மற்றும் 380 காராட்டுக்கும் அதிகமான வைரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நெக்லஸ்கள், வளையல்கள், கம்மல்கள் மற்றும் மோதிரங்கள் என மொத்தம் 213 விதமான ஆடம்பர நகை துண்டுகளைக் கொண்டு இது மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

16 மணிநேர உழைப்பு – திறப்பு விழா

இந்த கலைநயமிக்க ரங்கோலியை 10 கைவினைஞர்கள் இணைந்து சுமார் 16 மணிநேரம் கைவேலையாக உருவாக்கியுள்ளனர். கடந்த 6-ம் தேதி அன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், பிரபல இந்திய நடிகை தமன்னா பாட்டியா கலந்துகொண்டு இந்த பிரம்மாண்ட தங்க ரங்கோலியைத் திறந்து வைத்தார். தங்க நகைகளால் ஜொலிக்கும் இந்த ரங்கோலியைக் காண மாலுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.