;
Athirady Tamil News

தேசிய மட்டத்தில் உதைபந்தாட்டத்தில் சாதித்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவிகளுக்கு அமோக வரவேற்பு!

0
அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்டத்திலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணியினர் வெற்றியைப் பெற்று தேசிய ரீதியில் சம்பியன் பட்டத்தைத் தனதாக்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இச்சாதனை மூலம் கல்லூரிக்கும் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை சேர்த்த வெற்றி வீராங்கனைகளைக் கௌரவிக்கும் வகையில், இன்றைய தினம் புதன்கிழமை  மருதனார்மடம் சந்தியிலிருந்து பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆரம்பமான சிறப்பு ஊர்வலம், கே.கே.எஸ். வீதி ஊடாகச் சென்று யூனியன் கல்லூரியைச் சென்றடைந்தது.

கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தேசிய சம்பியன் வீராங்கனைகளை அன்போடு வரவேற்றுக் கௌரவித்தனர்.

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.