செயற்கை நுண்ணறிவு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்கள் செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் தவறுகள் உள்ளன என்று உலகளாவிய பொது ஊடக கூட்டமைப்பொன்று வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மட்டக்களப்பை பந்தாடிய மினி சூறாவளி ; வேரோடு சாய்ந்த மரங்கள்; வீடுகளுக்கு சேதம்!
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இன்று (24) வீசிய மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இதனால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பருவ மழை…
முதல் முறையாக பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை
கடந்த 500 ஆண்டுகளில் முதல் முறையாக பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை செய்தனர்.
கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆங்கிலிகன் திருச்சபை பிரிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டு…
யாழ் பருத்தித்துறை சந்தையில் போராட்டத்தில் குதித்த வர்த்தகர்கள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
பருத்தித்துறை நகரிலிருந்து அனைத்து வர்த்தக நிலையங்களும்…
பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் அந்த திட்டத்தை நிர்வகித்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில்…
அதிகரிக்கப்படும் பாடசாலை நேரம் ; வேலைநிறுத்ததிற்கு தயாராகும் அதிபர்கள், ஆசிரியர்கள்
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது.
இன்று (24) கொழும்பில்…
வீட்டு காவலாளியிடம் மகனை மன்னிப்பு கேட்க சொன்ன அம்பானி – ஏன் தெரியுமா?
மகனை வீட்டு காவலாளியிடம் அம்பானி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் குறித்து நீதா அம்பானி விவரித்துள்ளார்.
மகனை மன்னிப்பு கேட்க சொன்ன அம்பானி
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம், ரூ.9.55 லட்சம் கோடி சொத்து…
அதிகாலையில் ஆம்னி பேருந்தில் பற்றிய தீ – 25 பேர் உயிருடன் எரிந்து மரணம்
ஆந்திர மாநிலத்தில் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆம்னி பேருந்தில் தீ விபத்து
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து, படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து 40 பயணிகளுடன், நேற்று நள்ளிரவு…
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
51 ஆவது கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக இன்று பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராஷிக், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்(24.10.2025) மு. ப. 10.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர்…
Lemmon வால் நட்சத்திரம் இலங்கையர்களும் காணலாம் ; இன்று வானில் நிகழவுள்ள அதிசயம்
C/2025 A6’ என்ற வால் நட்சத்திரத்தை, இன்று(24) மாலை இலங்கையர்கள் காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வால் நட்சத்திரம் ‘Lemmon’ (லெமன்) என்றும் அழைக்கப்படும். சூரிய அஸ்தமனத்திற்குப்…
லெபனானில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
பெக்கா மற்றும் வடக்கு லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
ஏவுகணை உற்பத்தி தளம் மற்றும் பயிற்சி வளாகம் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச…
இஷாரா செவ்வந்திக்கு படகோட்டிய யாழ் இளைஞன் கைது
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை செலுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்…
அமெரிக்கா எங்கள் எதிரி ; பதிலடி கொடுக்க தயாராகும் ரஷ்யா
அமெரிக்கா எங்கள் எதிரி. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் நான்காவது ஆண்டை எட்டிப் பிடிக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. போரை…
“வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக , “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” எனும் விருது வழங்கும் நிகழ்வில் 16 பிரிவுகளில் 33 விருதுகள்…
பருத்தித்துறை சந்தையில் இடவசதி போதாது என வியாபரிகள் போராட்டம்
பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து பருத்தித்துறை நகரில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்
நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தையை , மீன் சந்தை…
21 வயசுதான்.. கணவர் வேலைக்கு புறப்பட்டதால் ஆத்திரம் – தலை தீபாவளியில் சோகம்!
தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண் தற்கொலை செய்துள்ளார்.
குடும்ப விவகாரம்
கடலூர், களத்துப்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை மகள் ரூபியா 21. இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையம்பட்டியை சேர்ந்த பாண்டி 30, என்பவருக்கும் திருமணம் நடந்தது.…
யாழில். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை – முதல் கட்டமாக 08 பேர் மீது…
யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதல்…
இரண்டே நிமிடங்களில் அழித்து விடுவோம் ; மிரட்டும் ட்ரம்ப்
அமைதி ஒப்பந்தத்தை மீறினால், இரண்டே நிமிடங்களில் அழித்து விடுவோம் என்று ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில்…
இளவரசர் ஆண்ட்ரூ பட்டங்கள் பறிப்பு; துயரத்துடன் வெளியேறிய இளவரசி Beatrice
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் ஏற்பட்ட கடும் புயலுக்கு மத்தியில், இளவரசர் ஆண்ட்ரூவின் மூத்த மகளான இளவரசி பீட்ரைஸ் (Princess Beatrice) முதல்முறையாகக் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாலியல் குற்றச்சாட்டுகளால் தனது தந்தையின் அரச பட்டங்கள்…
யாழில் இருந்து இஷாரா தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் - அராலித்துறை கடற்கரைப் பகுதியில் இருந்தே…
யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம்(23.10.2025) உயிரிழந்துள்ளார்.
காரைநகர் - பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும்…
வெளிநாடு செல்லவிருந்த கிளிநொச்சி இளைஞன் மாயம்; உறவினர்கள் கவலை
கிளிநொச்சியை சேர்ந்த இளைஞனை ஐந்து நாட்களாகக் காணவில்லை என காணாமல்போன இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த 26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே கடந்த 19 ஆம் திகதி முதல்…
9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய…
video link-
https://fromsmash.com/~bj6kI.h-B-dt
9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர் சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான…
எலி மருந்து கொடுத்து மாணவா் கொலை: பெண்ணுக்கு ஆயுள் சிறை
படிப்பில் தனது மகளுக்குப் போட்டியாக இருந்த மாணவருக்கு எலி மருந்து கலந்த குளிா்பானத்தைக் கொடுத்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
காரைக்கால் நேரு நகரைச் சோ்ந்தவா்கள்…
இஸ்ரேல் அமெரிக்காவின் பாதுகாப்பு மண்டலம் அல்ல ; நெதன்யாகு காட்டம்
இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்களை அந்த நாடே முடிவு செய்யும் என்றும், அது அமெரிக்காவின் பாதுகாப்பு மண்டலம் (புரோடக்டரேட்) அல்ல என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதுள்ளாா்.
காஸாவில் அமலில் உள்ள…
போதைப் பொருளுடன் தீபாவளி தினத்தன்று இருவர் கைது
போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த இருவரை தீபாவளி தினத்தன்று சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த இரு…
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும்: டிரம்ப்
‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் பெரும்பாலும் நிறுத்திவிட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தாா்.
இருந்தபோதும், ‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை முழுமையாக…
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞன் பொலிஸ் காவலில்
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சிறிய ரக கத்தியுடன் கைதான இளைஞனை 24 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.
நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை ஐஸ்…
தங்கத்திற்காக வடக்கு முஸ்லீம் மக்களை வெளியேற்றிய விடுதலைப்புலிகள்
video link-https://fromsmash.com/M8aFkc8K1S-dt
தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண…
தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/=…
அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, பொத்துவில் நீதவான் நீதிமன்றம் 1,00,000/= ரூபாவை…
சாய்ந்தமருது பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்
சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் குற்றங்களைத் தடுக்க பின்வரும் அம்சங்களின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி வாசிகளான உங்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் விடுத்துள்ள விசேட…
தங்கச் சங்கிலி திருட்டு – விசாரணை முன்னெடுப்பு
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக தங்க ஆபரணங்களை திருடிய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப்…
ஐரோப்பா சென்ற படகு கடலில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழப்பு
ஐரோப்பாவிற்கு குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில், சிறு குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இந்தத் துயரச் சம்பவம் துனிசியாவை (Tunisia) அண்டிய மத்தியதரைக்கடல் பகுதியில்…